Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, April 16, 2023

எமனையே விரட்டும் லெமன்

பொதுவாக எலுமிச்சை பழத்துக்குள் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .அதனால்தான் பூஜை ,புனஸ்காரம் என்று வந்தால் கூட லெமனை அதிகம் பயன் படுத்துகின்றனர் .மேலும் லெமனை வீட்டு வாசலில் சிலர் கட்டுவர் .இன்னும் சிலர் கார், லாரி சக்கரத்தின் அடியில் வைத்து நசுக்கி பூஜை செய்வதுண்டு .இதற்கு காரணம் அதில் அடங்கியுள்ள சில மருத்துவ குணங்கள்தான் காரணம் .அதில் உள்ள அமிலம் நம் உடலுக்கு நன்மை செய்கிறது .இந்த லெமன் மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து குடித்து வாருங்கள் 

இப்படி தேனுடன் லெமன் சேர்த்து குடிச்சா ,இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிக்கும்

மேலும் இந்த கலவை கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் கணிசமாக குறைக்கும் .

அடுத்து ,எலுமிச்சை பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.

இந்த நறுக்கிய லெமனுடன் மிளகுத்தூள், சுக்குத்தூள் சேர்த்து சாப்பிட்டால் செரிமானக்கோளாறு நீங்கும்.

அடுத்து ,எலுமிச்சைச்சாறு இரண்டு ஸ்பூன், இஞ்சிச்சாறு ஒரு ஸ்பூன் உடன், சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் குடித்தால் வயிற்று வலி நம்மை விட்டு ஓடி விடும் .

அடுத்து புதினா சாறு 1 ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 3 ஸ்பூன் சேர்த்து கொஞ்சம் சர்க்கரை சேர்த்து உண்டால் பசி எடுக்காதவர்களுக்கு கூட நல்லா பசி எடுக்கும்

No comments:

Post a Comment