Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 16, 2023

ஒரு டம்ளர் நீரில் புதினா சாறை சேர்த்து கலந்து குடித்தால்,எந்த நோய் விலகும் தெரியுமா ?



நம்மை ஒருவர் விருந்துக்கு கூப்பிட்டு ,அந்த விருந்தில் நமக்கு பிடித்த உணவுகளை பரிமாறி விட்டு நம்மை சாப்பிட அழைக்கும்போது நமக்கு அஜீரண கோளாறு இருந்து எதுவும் சாப்பிட முடியவில்லையென்றால் அதை விட கொடுமை வேறெதுவும் இருக்க முடியாது .அதனால் அந்த அஜீரண கோளாறை விரட்டியடிக்க சில வழிகளை கூறியுள்ளோம் .

1.ஒரு க்ளாஸ் நீரில் புதினா சாறை சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும் .

2.இந்த புதினா நீரை குடித்தால், அஜீரண கோளாறிலிருந்து உடனே நிவாரணம் கிடைக்கும்.

3.அதேபோல் கொத்தமல்லி ஜூஸ் எடுத்து ஒரு டம்ளர் மோரில் கலந்து வைத்து கொள்ளவும்

4.இந்த மோருடன் கொத்தமல்லி ஜூஸ் சேர்த்து குடித்தால், அஜீரண கோளாறு அடுத்த நிமிடமே காணாமல் போகும்

5..அடுத்து ஒரு துண்டு இஞ்சியை உப்பில் தொட்டு,வைத்து கொள்ளவும் .

6. இந்த உப்பில் தொட்ட இஞ்சியை வாயில் போட்டு மெதுவாக மென்று மென்று அதன் சாற்றினை விழுங்குங்கள்,

7.இப்படி செய்தால் செரிமான சக்தி தூண்டப்பட்டு, அஜீரண கோளாறு உடனே உடலை விட்டு போகும் .

8..ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை 1/2 டம்ளர் நீரில் சேர்த்து வைத்து கொள்ளவும்

9.இந்த பேக்கிங் சோடா நீரை பருகினால், உடனடியாக அஜீரண கோளாறிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

10.அடுத்து வறுத்த மல்லியை பொடி செய்து ஒரு டம்ளர் மோரில் கலந்து வைத்து கொள்ளவும் .இந்த கலவையை குடித்தால், செரிமான பிரச்சனைகள் மாயமாய் மறைந்து போகும் .

No comments:

Post a Comment