JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
ரேஷன் கார்டு ரத்து! கூட்டுறவு செயலாளர் விளக்கம்
தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் அரசால் வழங்கப்படும் குடும்ப அட்டை மூலம், அன்றாடம் பயன்படுத்த படும் உணவு பொருட்களை அரசின் மலிவு விலையில் வாங்கி கொள்ளலாம்.
மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்படும் அரசு சம்பந்தமான சலுகைகள், நிவாரண பொருட்கள், நிதி உதவிகள் போன்றவற்றை குடும்ப அட்டையை பயன்படுத்தி வாங்கி கொள்ளலாம்.
மேலும் மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது போன்ற பல்வேறு வகையான முறையில் மக்களுக்கு பயன் படும் இந்த ரேஷன் கார்டு குறித்து தற்போது தமிழகத்தில் ஒரு போலியான தகவல் உலாவந்து கொண்டிருக்கிறது. இந்த தகவல் குறித்து தமிழக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் 3 அல்லது 4 மாதங்கள் வரையில் வாங்காமல் இருந்தால், அந்த ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படும் எனவும், ஆதலால் ஏதேனும் ஒரு பொருளை அவ்வப்போது வாங்கிக்கொள்ள வேண்டும் என நம்பபடுகிறது.
ஆனால், அது உண்மையல்ல. ரேஷன் அட்டை பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரத்து செய்யப்படாது. அது வெறும் வதந்தி. ரேஷன் கார்டில் குறிப்பிட்ட நபர் குறிப்பிட்ட முகவரியில் இருந்தால் அந்த கார்டு ரத்து செய்யப்பட மாட்டாது. போலி ரேஷன் கார்டுகள் மட்டுமே ரத்து செய்யப்படும்.
இந்தியாயாவில் மற்ற மாநிலங்களில் மத்திய உணவு பாதுகாப்பு விதிகளின் படி குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே ரேஷன் பொருட்களை வாங்க முடியும். ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான அனைவரும் ரேஷன் பொருட்கள் வாங்கலாம் என கூறினார்.
No comments:
Post a Comment