JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் பிரச்சனை இப்போதெல்லாம் சகஜமாகிவிட்டது. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, பக்கவாதம், வகை 2 நீரிழிவு மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் வரும். அதற்கேற்ப முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். அதனை செய்யாமல் பொதுவாக சில தவறுகளை செய்வதால் பலருக்கும் பிரச்சனை அதிகரித்து, வாழ்வியல் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்த தவறுகள் கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்யும்
ஆரோக்கியமற்ற உணவு
நீங்கள் தொடர்ந்து ஆரோக்கியமற்ற உணவை உட்கொண்டால், உங்களுக்கு கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். இதனால் உங்களின் ஆரோக்கியம் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் போது பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு, இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணக்கூடாது. ஏனெனில் இவற்றை உட்கொள்வதால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது.
உடற்பயிற்சி
நீங்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டால், கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்யுங்கள். நாள் ஒன்றுக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
புகைபிடித்தல்
புகைபிடித்தல் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலை குறைத்து கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்க்கும். இது மாரடைப்பு அபாயத்தையும் அதிகரிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க, புகைப்பிடிப்பதை முற்றிலுமாக கைவிடுங்கள்.
No comments:
Post a Comment