JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

விலை மலிவான வெந்தயத்தில் விலை மதிப்பு மிக்க ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .அந்த வெந்தயத்தை எப்படி உபயோகித்தால் நோய்கள் விலகும் என்று இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்

1.வெந்தயத்தில் விட்டமின் 'ஏ' அதிகம் இருப்பதால் ,இதை இரவில் தண்ணீரில் ஊறவைத்து உண்டு வந்தால் கண் பார்வையை தெளிவாக்கும்.
2.அடுத்து வெந்தயத்தை சிறிது வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும் ..பின்னர் வறுத்த வெந்தயத்துடன் சுக்குடன் வைத்துப் பொடியாக்கிக்கொள்ள வேண்டும். இந்த கலவையுடன் கொஞ்சம் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆரம்பநிலை கீல் வாத நோய்கள் உடலை விட்டு ஓடிவிடும் .
3.சிலருக்கு குடல் சம்மந்தமான நோய்கள் இருக்கும் .இந்த நோய்கள் குணமாக தண்ணீரில் 4 மணிநேரம் ஊற வைத்து எடுத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் போதும் .
4.இப்படி இரவில் ஊற வைத்த வெந்தயத்தை ,குழந்தை பெற்ற தாய்மார்கள் உண்டு வர பால் நன்றாக சுரக்கும்.
5.வெந்தயத்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இதை உணவில் சேர்ப்பதால் முடி கொட்டாமல் ஆரோக்கியமாய் இருக்கும் ,
6.வெந்தயத்தை அளவோடு சேர்த்து வந்தால் சீக்கிரத்தில் நரை வராது. அத்துடன் முடி கொட்டாமல் முடியும் நன்றாக வளரும்.
7..சிலருக்கு உடலில் தீக்காயம் இருக்கும் .அவர்கள் வெந்தயத்தை ஊறவைத்து விழுதாக அரைத்து பற்றுப் போட்டால் விரைவில் தீக்காயம் குணமாகும்.
No comments:
Post a Comment