JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதால் பல மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் மத்திய பிரதேச அரசு மாணவர்களுடைய விளையாட்டு கலாச்சாரம் மற்றும் உடல் தகுதியை வளர்க்கும் விதமாக அனைத்து அரசு பள்ளிகளிலும் வரும் கல்வியாண்டு முதல் 1 முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கட்டாய விளையாட்டு வகுப்புகள் நடத்தப்பட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்த பள்ளிக்கல்வித்துறையானது இளம் மாணவர்களுடைய ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக விளையாட்டை ஒருங்கிணைப்பதன் மூலமாக சிறிய வயதில் இருந்தே மாணவர்களுடைய ஒழுக்கம், விடாமுயற்சி, குழு பணி போன்றவற்ற விதைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment