
ஆதார் கார்டில் முகவரி மாற்றம், பிறந்த தேதி உள்ளிட்டவை தவறாக இருந்தால் அதை எந்த வித கட்டணமும் இன்றி இலவசமாகவே திருத்தம் செய்து கொள்ள முடியும்.
வரும் ஜூன் 14 ஆம் தேதி வரை இந்த வசதியை ஆதார் ஆணையம் வழங்கியிருக்கிறது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் (UIDAI) ஆதார் அட்டைகளை வழங்கி வருகிறது. ஆதார் அட்டை தற்போது நாட்டில் முக்கிய அடையாள அட்டையாக உள்ளது. அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண்கள் அவசியம் கேட்டு பெறப்படுகிறது.
12 இலக்கங்கள் கொண்ட இந்த ஆதார் அடையாள அட்டையில் ஒருவரின் கை விரல் ரேகைகள் முக்கிய தரவுகள் பெறப்படுகின்றன. இதனால் அரசின் நலத்திட்டங்கள் சரியான பயனாளியிடம் சேரும் என்றும் போலிகள் தவிர்க்கப்படும் எனவும் கூறும் அரசின் துறைகள் ஆதார் எண்ணையே முக்கியமாக கேட்கிறது. வங்கிக் கணக்கு துவங்குவது முதல் செல்போன் எண்கள் வாங்குவது முதல் அனைத்திற்கும் பிரதான ஆவணமாக ஆதார் எண்களையே கேட்டு பெறுகிறார்கள்.
இதனால் ஆதார் அட்டையில் முகவரி, வயது, பிறந்த தேதி போன்றவை சரியானதாக இருக்க வேண்டியது அவசியம்.ஏனெனில் ஆதாரில் ஒரு தேதியும் பள்ளி சான்றிதழில் போன்ற ஆவணங்களில் ஒரு தேதியும் இருந்தால் ஆவணங்களை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் மறுக்க வாய்ப்பு உள்ளது. இதானால் ஆதார் ஆவணங்களில் சரியான விவரங்களை வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒருவேளை இதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் ஆதார் மையத்திற்கு சென்று மாற்றிக்கொள்ள முடியும். இந்த சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், மார்ச் 15 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை இலவசமாக செய்து கொள்ளலாம் என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், மை ஆதார் போர்டலில் மட்டுமே இதை இலவசமாக செய்ய முடியும்.
ஆதார் நேரடி மையங்களில் ஆவண திருத்தங்களுக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும். தற்போது ஆதார் அட்டை பெறப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால் அடையாளம் மற்றும் முகவரியை மீண்டும் சரிபார்க்க ஆவணங்களை ஒருமுறை அப்லோடு செய்து அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவுறுத்தியிருப்பதால் இந்த வசதியை கொடுத்துள்ளது.
இந்த வசதியை பெற வேண்டும் என்றால்https://myaadhaar.uidai.gov.in/பக்கத்திற்கு செல்ல வேண்டும். அங்கு முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்ஷன்களை கிளிக் செய்து முகவரி ஆவணங்கள் மற்றும் பிறந்த தேதி, வயது போன்றவற்றை அப்டேட் செய்து கொள்ள முடியும். ஜூன் 14 ஆம் தேதி வரை மட்டுமே இதை இலவசமாக செய்ய முடியும். அதற்கு பிறகு ஆன்லைன் மூலம் செய்தாலும் கட்டணம் வசூலிக்கப்படும்.
No comments:
Post a Comment