JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விரும்பினால், பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் மூலமாகவும் மே 9-ம் தேதி(இன்று) முதல் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ரூ.275 கட்டணம். மறுகூட்டலை பொருத்தவரை, உயிரியல் பாடத்துக்கு ரூ.305, மற்ற பாடங்களுக்கு தலா ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும்போது ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, மறுகூட்டல் முடிவுகளை அறிய முடியும். எனவே, அந்த சீட்டை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்று தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment