Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 30, 2023

2-3 நிமிடத்தில் உங்கள் உடல் சூடு சட்டென்ன குறையும்!!


நமக்கு இருக்கும் உடல் சூட்டை குறைப்பதற்கான சிறந்த வைத்திய முறையை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இந்த வைத்திய முறையை பின்பற்றினால் உடல் சூடு குறைவது மட்டுமில்லாமல் சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் பிரச்சனைகளும் சரியாகும்.

நமக்கு இருக்கும் உடல்சூடு, சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல், சிறுநீர் கடுப்பு போன்ற பிரச்சனைகளை தீர்க்க ஒரே ஒரு மூலிகையை வைத்து குணமாக்கலாம். அதுவும் அந்த மூலிகையின் பத்து இலைகள் மட்டும் போதும். இந்த மூலிகை என்ன என்றால் அது நன்னாரி செடி தான்.

நன்னாரி செடி இரண்டு வகைப்படும். பெரு நன்னாரி, சிறு நன்னாரி என இரண்டு வகைப்படும். நன்னாரி செடி இயற்கையாகவே குளிர்ச்சி தன்மை உடையது. அதிலும் நன்னாரி செடியின் வேரில் அதிக அளவு குளிர்ச்சி தன்மை உள்ளது.

உடல் சூட்டை தணிக்க

* நன்னாரி வேரினை எடுத்து சிறிது சிறிதா நறுக்கி பொடி சொய்து அதை ஒரு வெள்ளை துணியில் கட்டி ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அந்த பாத்திரத்தில் இந்த நன்னாரியை போட்டு விடவேண்டும். சிறிது நேரம் கழித்து அந்த தண்ணீரை எடுத்து குடித்தால் உடல் சூடு குறையும்.

* நன்னாரி இலைகளை அப்படியே சாப்பிடலாம். பத்து நன்னாரி இலைகளை சாப்பிட்டு தண்ணீர் அல்லது மோர் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தாலும் உடல் சூடு குறையும்.

இவ்வாறு செய்வதால் உடல் சூடு குறைவது மட்டுமில்லாமல் சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கழிக்கும் பொழுது சிவப்பு நிறத்தில் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகளைசரி செய்யும்.

No comments:

Post a Comment