Tuesday, May 30, 2023

ஒரு டைம் ரீசார்ஜ் செய்தால் போதும்.. 388 நாட்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்..ஜியோ பயனர்களுக்கான சூப்பர் திட்டம்..!!!!

ஏரளமான வாடிக்கையாளர்கள் வழக்கமான மாதாந்திர திட்டத்தை விடவும் அதிக நன்மைகள் மற்றும் குறைந்த செலவு கொண்ட நீண்ட நாட்களுக்கான திட்டத்தை விரும்புகின்றனர்.

அந்த வகையில் ஜியோவின் வருடாந்திர திட்டம் பலருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும் எனில் மிகையில்லை.

jio-வின் ரூ.2,999 பிளானில் செல்லுபடி ஆகும் காலமானது 12 மாதங்கள் ஆகும். அதன்படி, இத்திட்டம் 365 தினங்களுக்கு செல்லுபடியாகும். இத்திட்டத்தின் சிறப்பு என்னவெனில் 23 தினங்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதனடிப்படையில் உங்களது பிளான் 388 தினங்களுக்கு இருக்கும். ஒருமுறை ரீசார்ஜ் செய்தபின் மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்யும் தொல்லை நீங்கும். இந்த திட்டத்தில் பயனாளர்கள் தினசரி 2.5gp டேட்டாவை பெறுகின்றனர்.

தினமும் இன்டர்நெட் வரம்பு காலியான பின் வேகம் குறையும். இத்திட்டத்தின் மாதாந்திர கட்டணம் வெறும் ரூ.250 ஆகும். மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு வசதியானது கிடைக்கும். அதோடு வாடிக்கையாளர்கள் உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்பு சேவைகளையும் பெறுவர். இதில் நாளொன்றுக்கு 100 sms இலவசம். மேலும் நீங்கள் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி ஆகிய ஜியோ ஆப்ஸின் இலவச சந்தாவை பெறுவீர்கள். அத்துடன் 5g சேவையையும் அனுபவிக்க இயலும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News