Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 4, 2023

கல்லீரல் பாதிப்பை உணர்த்தும் அறிகுறிகள்..!

உடல் ஆரோக்கியமாக செயல்பட உதவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று கல்லீரல். இந்த உறுப்பு தானே புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட ஒன்றாகும்.

ரத்தத்தை சுத்திகரித்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இதில் இருந்து தான் பித்தநீர், ரத்தம் உறைய உதவும் ரசாயனம் உள்ளிட்டவற்றை கொடுக்கிறது. இத்தகைய கல்லீரல் பாதிக்கப்பட்டால் உயிருக்கே ஆபத்தாகும். அதனால் கல்லீரல் பாதுகாப்பு என்பதில் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும்.

கல்லீரல் பாதிப்பு என்பது உடனடியாக ஏற்படாது. நாட்பட்ட அறிகுறிகளுடன் தென்படும் கல்லீரல் அதிக கொழுப்பு உணவுகளை உண்பவர்கள், மது அருந்துபவர்கள், மோசமான வாழ்க்கை முறை கொண்டவர்களுக்கு கல்லீரல் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இது செயலிழப்புக்கும் வழிவகுக்கலாம். ஒருவேளை கல்லீரல் சேதமடைந்தால் அப்போது தென்படும் அறிகுறிகள் பொதுவாக உள்ளன. அது குறித்து இங்கே பார்க்கலாம்.

கால் வீக்கம்

திடீரென காலில் வீக்கம் ஏற்பட்டால் நீங்கள் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். சிறுநீர் நிறம் ஆகியவற்றை கவனித்து அது மஞ்சளாக இருந்து கால் வீக்கமும் இருந்தால் கல்லீரல் பாதிப்புகளின் அறிகுறியாக இருக்கலாம். உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். உடலில் ஏற்கனவே பிரச்சனையாக இருந்தால் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

மஞ்சள் நிறத்தில் தோல் - கண்கள்

கல்லீரல் பாதிப்பு இருந்தால் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருங்கள். இந்த பிரச்சனை இருந்தால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ரத்த சிவப்பணுக்கள் சிதைவதால் உருவாகும் ஒரு சேர்மம் பிலிரூபின். இதனை கல்லீரலால் நீக்க முடியாது. இதனால் ரத்த ஓட்டத்தில் அதிக அளவு பிலிரூபின் கலக்க வழிவகுக்கிறது. இதனால் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுகிறது. தொடர்ந்து மஞ்சள் நிறம் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

சிறுநீரின் நிறம்

ரத்த ஓட்டத்தில் பிலிரூபின் சேர்மம் அதிகரித்தால் வெளியேறும் சிறுநீரும் அடர் மஞ்சள் நிறமாக இருக்கும். உங்கள் சிறுநீர் தொடர்ந்து அடர் நிறத்திலிருந்தால், அதை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையெனில் கல்லீரல் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும். ஏனெனில் இது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாகும். எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மருத்துவரை அணுகுவது நல்லது.

அதிகப்படியான சோர்வு

கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறிகளில் ஒன்று சோர்வு என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அடிக்கடி சோர்வாக இருப்பதாக உணர்ந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாகும். அத்தகைய சூழ்நிலையில், மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம். கல்லீரலில் கொழுப்பு சேர்ந்தால், உங்கள் உணவு பழக்கத்தை மேம்படுத்துவது மற்றும் சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவசியம். கல்லீரலில் சேர்ந்துள்ள கொழுப்பை சில வீட்டு வைத்தியங்கள் மூலமும் எளிதாக அகற்றலாம். ஆனால் இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

No comments:

Post a Comment