Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, May 8, 2023

வேப்பம் பூவை, தேங்காய் எண்ணெயில் தேச்சி குளிச்சா, தலையில் உள்ள எந்த பிரச்சினை தீரும் தெரியுமா ?

பொதுவாக நம் தலையில் முடி உதிர்வுக்கு பல்வேறு காரணம் கூறப்படுகிறது .அந்த காரணத்தில் முக்கியம்னது பொடுகு பிரச்சினை .இந்த பொடுகு தொல்லை தலையில் வந்து விட்டால் முடி உதிர்வு இருந்து கொண்டேயிருக்கும் ,இந்த பொடுகு பிரச்சினையை எப்படி தீர்க்கலாம் என்று இந்த பதிவில் பாக்கலாம்

1.சிலருக்கு தலையில் பொடுகு பிரச்சினை வந்து எந்நேரமும் தலையில் அரிப்பு எடுத்து ,முடி உதிரும் .இந்த பிரச்சினை உடையவர்களுக்கு எளிதில் தீர்வை தரும் வேப்பம்பூ

2.முதலில் காய்ந்த வேப்பம்பூவை கொஞ்சம் ஒரு கை பிடியளவு எடுத்து கொள்ளுங்கள் ,

3.இந்த காய்ந்த வேப்பம்பூவுடன் ,கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ளவும் .பின்னர் இவற்றை நன்றாக காய்ச்சி கொள்ளுங்கள்

4.பின்னர் இந்த காய்ச்சிய எண்ணெயை நன்கு சூடு ஆறிய பிறகு தலையில் தேய்க்க வேண்டும்.

5.இந்த எண்ணெய் தலையில் தேய்த்த பிறகு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

6.பின்னர் அரை மணி நேரம் கழித்து குளிக்க நம் முடி ஆரோக்கியம் சிறக்கும் .

7.இந்த எண்ணெயை ஒரு நாள் ,இரண்டு நாள் அல்ல ,தொடர்ந்து மூன்று மாதம் வாரம் இரு முறை என தேய்த்து குளித்து வந்தால் பொடுகு பிரச்சினை முற்றிலுமாக மாறும்

No comments:

Post a Comment