Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 13, 2023

உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிடுங்க!


முன்னோர்களின் வாழ்க்கை முறையில் தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் வெல்லம் கலந்து குடித்துவிட்டுதான் நாளை தொடங்குவார்கள் என்ற பேச்சு உண்டு.

காரணம் இப்படி குடிப்பதால், அன்றைய நாள் முழுவதும் செரிமான அமைப்பை சீராக வைத்துக் கொள்ளுமாம்.

வெல்லம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பண்புகளை கொண்டுள்ளது. அதாவது இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் மற்றும் பல வைட்டமின்கள் இதில் உள்ளன. எனவே, சாப்பிட்ட பிறகு வெல்லம் சாப்பிடுவது கூடுதல் நல்லது. அப்படி உணவுக்கு பின் வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிட்டால் எலும்புகள் வலுவடையும். வெல்லத்தில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல வகையான சத்துக்கள் உள்ளன. இது எலும்புகளை வலுப்படுத்த வேலை செய்கிறது.

வெல்லம் செரிமானத்திற்கு மிகவும் உதவும். உணவிற்கு பிறகு வெல்லம் சாப்பிடுவது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. வாயு, வீக்கம், அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருகிறது. அத்துடன், உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.

உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிடுவது ஆற்றலை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

இரத்த அழுத்த நோயாளிகளுக்கு வெல்லம் ஒரு மருந்து. வெல்லம் சாப்பிடுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.

வெல்லத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் இரத்த சோகை ஏற்படாது. இரத்த சோகை நோயாளிகளுக்கு வெல்லம் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். வெல்லத்தில் இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் உடலில் இரத்தத்தை அதிகரிக்கும். உடலில் ரத்தம் குறைவாக இருப்பவர்கள் கண்டிப்பாக வெல்லம் சாப்பிடலாம்

No comments:

Post a Comment