Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 13, 2023

மருத்துவர்களின் காதலியாக சொல்லப்படும் கடுக்காயின் மருத்துவ பயன்கள்!


கடுக்காயை வட மொழியில் 'மருத்துவர்களின் காதலி' என்று அழைக்கிறார்கள். சித்த மருத்துவத்தில் 'திரிபாலா' என்ற கூட்டு மருந்தாக இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். கடுக்காய் எல்லா நாட்டு மருந்துக்கு கடைகளிலும் மிக எளிதாகப் கிடைக்கும். கடுக்காயின் தோலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உள்ளிருக்கும் பருப்பை பயன்படுத்தக் கூடாது.

இதன் ஓட்டைப் பொடியாக்கி வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். கடுக்காயை மட்டுமே உண்டு உயிர் வாழலாம் என்று பழைய சித்த மருத்துவப் பாடல் கடுக்காயின் புகழை பாடுகிறது. இன்னொரு சித்த மருத்துவப் பாடலில் காலையில் இஞ்சி, பகலில் சுக்கு, மாலையில் கடுக்காய் என ஒரு மண்டலம் உண்டால் 'கோலை ஊன்றி குறுகி நடப்பவரும் கூட காலை வீசி குலுங்கி நடப்பாராம்' என்று கடுக்காயின் சிறப்பை கூறுகிறது.

கடுக்காய் பயன்கள் :

நீண்ட அயுளை பெறலாம்

தினமும் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடலுக்கு தேவையான துவர்ப்பு சக்தியை தேவையான அளவு பெற்று விடலாம். கடுக்காய் தூளை தினமும் ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், நோயில்லா நீண்ட ஆயுளை பெறலாம்.

மலச்சிக்கல் தீரும் :

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, ஒரு தேக்கரண்டி கடுக்காய்ப் பொடி எடுத்து, வெந்நீரில் கலந்து குடித்துவந்தால், மலச்சிக்கல் தீரும்.

வயிற்று வலியை குறைக்கும் :

குழந்தைகள் வயிற்று வலியால் அழுகின்ற சமயங்களில் கடுக்காயை இழைத்து வயிற்றில் பற்றுப் போல போட்டால் வயிற்று வலி பறந்து போய்விடும்.

வயிற்று பிரச்சனைகள் சரியாகும் :

15 கிராம் கடுக்காய்த் தூள், பதினைந்து கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடித்தால் நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிரச்சனைகள் எல்லாம் பறந்தோடும்.

தோல் பிரச்சனைகளை தீர்க்கும் :

தோலில் படை, நமைச்சல் உள்ளவர்கள் கடுக்காயை சந்தனக் கல்லில் அரைத்து பாதிப்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் தோல் பிரச்சனைகள் நாளடைவில் மறைந்து விடும்.

உடலை பலப்படுத்தும் :

கடுக்காய் ஓட்டை தூளாக்கி இரவு சாப்பிட்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் வாயில் போட்டு, ஒரு டம்ளர் நீரைக் குடித்து வந்தால் உடல் வலு பெறும்.

வாத பித்த நோய்கள் பறந்தோடும் :

கடுக்காய்த் தூள் 10 கிராம் எடுத்து கொண்டு, அதே அளவு சுக்கு, மற்றும் திப்பிலி தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டுவர, வாதம், மற்றும் பித்த நோய்கள் சரியாகும்.

ஆரோக்கியம் கூடும் :

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவை சேர்ந்ததுதான் திரிபலா சூரணம். திரிபலா சூரணத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் மேம்படும்.

தலைமுடி உதிர்வை தடுக்கும் :

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை ஒன்றாக கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்வு சரியாகும்.

பல் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு :

கடுக்காய்ப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால், பற்கள் உறுதியாகும். ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகள் குணமாகும்.

கண் பிரச்சனைகள் சரியாகும் :

25 கிராம் அளவுக்குக் கடுக்காய்ப் பொடியுடன், ஒரு டம்ளர் நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, அரை டம்ளர் நீராகச் சுண்டிய பின்னர் அதை குடித்து வந்தால், கண் நோய்கள் குணமாகும்.

வயிற்று புண்கள் குணமாகும்:

20 கிராம் கடுக்காய்ப் பொடியுடன், 20 கிராம் நெய் சேர்த்து வறுத்து, இந்துப்புடன் சேர்த்து இரண்டு கிராம் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்புண்கள் குணமாகும்.

நோய்களை குணபடுத்தும்:

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு. கடுக்காய் வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் அனைத்தையும் ஆற்றிடும் வல்லமை பெற்றது. பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும்:

3 கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால், ஜீரணசக்தி அதிகரிக்கும்.

No comments:

Post a Comment