JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
அன்றைய காலங்களில் இயற்கை காற்றை பெறுவதற்கு மொட்டை மாடியில் படுத்து உறங்குவது உண்டு. சில வீடுகளின் மேற்கூரைகள் சுண்ணாம்பு சாந்துகளால் கட்டப்பட்டிருப்பதுண்டு.இம்மாதிரியான வீடுகளில் தரையில் தூங்குவது அலாதி சுகம் என்றே கூற வேண்டும்.
ஆனால் தற்போது கட்டிலிலும், மெத்தையிலும் படுத்து தூங்குவதை பலரும் விரும்பி வருகின்றனர். ஆனால் தரையில் தூங்கி எழுந்தால், ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதுடன் பல நன்மைகளையும் பெறலாம். தரையில் தூங்குவதால் என்ன நன்மை?தரையில் படுத்து உறங்கினால் முதுகுவலி பிரச்சினை ஏற்படுவது இல்லை. இவ்வாறு படுக்கும்போது இயற்கையாகவே உங்களது முதுகெலும்பு தன்னைத்தானே மாற்றிக் கொள்ளும்.
சிலருக்கு தரையில் படுக்க ஆரம்பித்தவுடன் இடுப்பு பகுதியில் வலி ஏற்படும். ஆனால் இவை நாட்கள் செல்ல செல்ல மாறிவிடும். தரையில் படுத்து உறங்கினால் ஆழ்ந்த தூக்கத்தினை பெறலாம். இதனால் உடல் ஆரோக்கியமாக காணப்படுகின்றது. மேலும் தரையில் தூங்குவதில் முற்றிலும் புரண்டு படுத்து தூங்கும் போது, ஒருவரின் கை மற்றும் கால்கள் இயல்பான இயக்கத்தினை பெறமுடிகின்றது. வயதானவர்கள், மூட்டுவலி பிரச்சினை இருப்பவர்கள், எழுந்து நிற்க முடியாதவர்கள் இவர்கள் தரையில் படுத்து உறங்குவதை தவிர்க்கவும்.
No comments:
Post a Comment