Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, May 22, 2023

பள்ளி திறக்கப்படும் தேதியை அறிவித்த அமைச்சர்...!!

தமிழ்நாட்டில் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மற்றும் ஒன்றுமுதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் ஏப்ரல் 27-ஆம் தேதி நிறைவடைந்தது. இதனை அடுத்து அனைத்து மாணவர்களுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வந்தது.

இந்நிலையில், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் வழக்கம் போல் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதேபோல், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதி பள்ளிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

இதனிடையே, கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், பள்ளிகள் திறப்பில் மாற்றம் இல்லை என அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment