Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, May 1, 2023

உடல் கொழுப்பை கரைக்க உதவும் முட்டைகோஸ்



உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு முட்டை கோஸ் ஒரு பயனுள்ள உணவாக இருக்கும். மேலும் இதன் பயன்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

முட்டைகோஸ் ஒரு கீரை வகையை சேர்ந்த உணவாகும் இதில் பல வகைகள் பல இடங்களில் இருந்தாலும் இதனுடைய முன்னோர் பிறப்பிடம் பிரிட்டன் மற்றும் ஐரோப்பா நாடுகளாகும் மற்றும் இது உருவாகிய காலம் 1000 BC என்று கூறப்படுகிறது. முட்டை கோஸ் இந்தியாவில் பிரபலமான உணவு வகைளில் ஒன்றாகும். முட்டைகோஸில் வைட்டமின் சி மற்றும் பி உள்ளன. முட்டை கோஸில் உள்ள சல்பர், மற்றும் அயோடின் ஆகியவை வயிறு, குடல் மற்றும் குடற் சவ்வு போன்ற உறுப்புகளை சுத்தப்படுதுகின்றன மற்றும் புண்களை நிவர்த்தி செய்கிறது.

முட்டைகோஸில் டார்டரானிக் என்ற ஒரு வகை அமிலம் உள்ளது அது தேவைக்கதிகமாக உள்ள மாவுப்பொருள்களை கொழுப்பாக மாறாமல் இருக்க செய்கிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு பயனுள்ள உணவாக இருக்கும். உடல் கொழுப்பை கரைக்க உதவும் முட்டைகோஸ் சூப் ரெசிபி இதோ: தேவையான பொருட்கள் :
முட்டைகோஸ் -1கப், இஞ்சி,பூண்டு விழுது -1டீஸ்பூன், மிளகு -1ஸ்பூன், சீரகம் -1 ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், இஞ்சி,பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்க வேண்டும் . பின் இதனுடன் நறுக்கிய முட்டைகோஸ் , தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்து வாசம் வந்ததும், இறக்கி பரிமாறினால் முட்டைகோஸ் சூப் தயார்

No comments:

Post a Comment