Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, May 5, 2023

பித்தம் அதிகரிக்காமல் பார்த்துக்கொண்டால் நன்மைகள் ஏராளம்..!

உடலின் பித்தம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பித்தம் மிக மோசமானது என்றே காலாகாலமாக நாம் மனதில் எண்ணியிருப்போம்.

ஆனால் அளவு மீறாத பித்தம் உடலுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்கிறது என்பது பலர் அறியா விஷயம். பித்தம் குறித்த முக்கியத் தகவல்களைத் தெரிந்துகொள்வோமா? நமது கல்லீரலில் பித்த நீர் சுரக்கிறது. கல்லீரலில் சுரக்கும் பித்தநீர் பித்தப்பையில் வந்துசேரும்.

இது செரிமானத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பித்த நீர் கொழுப்பு அமிலமாக உருமாறி செரிமான மண்டலம் வழியாக உடலுக்குள் செல்கிறது. இதன் முக்கியப் பணி கொழுப்பு மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை ஈர்த்துக்கொள்ளுதலே. அதிகப்படியான கொலஸ்ட்ராலை உடலில் இருந்து வெளியேற்றும்.

இதனால் இதய நன்மைக்கும் பித்தம் உதவுகிறது. உடலின் வளர்சிதை மாற்றம் மற்றும் சில இயக்கங்களுக்கும் பயன்படுகிறது. பச்சையும் மஞ்சள் நிறமும் கலந்து இருக்கும் இந்த பித்த நீர் செரிமானத்தின்போது கொழுப்பை உடைக்க உதவுகிறது. பித்த நீர் நமது உடலுக்கு இவ்வளவு நன்மைகள் செய்தாலும்கூட, இது அதிகரித்தால் ஏராளமான பிரச்னைகளும் தோன்ற வாய்ப்புள்ளது.

காரம், புளிப்பு, உவர்ப்பு, அசைவ உணவுகளில் மீன், கிரில்டு சிக்கன், நண்டு, எண்ணெயில் பொரித்த உணவுகள், மது, புகையிலை போன்றவை பித்தத்தைத் தூண்டிவிடும். இதனால் 40 வகையான பித்த நோய்கள் வர வாய்ப்புள்ளது. எனவே பித்தத்தை கட்டுக்குள் வைக்க உணவுக்கட்டுப்பாடு, பழக்கவழக்க மாற்றம் அவசியம். பித்தத்தைக் குறைக்க உணவில் உப்பு, காரம், எண்ணெயைக் குறைக்க வேண்டியது அவசியம்.

No comments:

Post a Comment