Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, May 2, 2023

ஆண்ட்ராய்ட் மொபைலில் அழித்த படங்களை திரும்ப எடுப்பது எப்படி?

நம்மில் பெரும்பாலானோர் ஆண்ட்ராய்ட் மொபைல்போன்தான் பயன்படுத்துகிறோம். Internal strorage மிகுந்து விடக்கூடாது என்பதற்காக, அவ்வப்போது கேலரியில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அழித்து விடுவோம்.

அப்படி அழிக்கும்போது, தவறுதலாக நமக்கு வேண்டிய புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ அழித்து விட்டால் அதனை எப்படி மீட்டெடுப்பது? விளக்கம் தருகிறார் சாஃப்ட்வேர் அனலிஸ்ட் ஆர்.சர்வேஷ்...

``இப்போதுள்ள மொபைலில், கூகுளின் Default Gallery App தான் பெரும்பாலும் உள்ளது. அதில் உங்களுடைய புகைப்படத்தையோ, வீடியோவையோ அழித்த பின்பு குறைந்தபட்சம் 30 நாள்களுக்கு ஒட்டுமொத்தமாக அழிக்காமல் Trash ஃபோல்டரில் இருக்கும்படியான அமைப்பு உள்ளது. உங்கள் கேலரியில் இருந்து அந்தப் புகைப்படமோ, வீடியோவோ அழிக்கப்பட்டிருக்குமே தவிர, Trash Folder-ல் அழிக்கப்பட்டு 30 நாள்களுக்கு அந்த டேட்டா அப்படியே இருக்கும்.

அழித்ததை திரும்ப எடுக்க வேண்டுமென்றால் Photo Gallery -ஐ திறந்து Library-ஐ தேர்வு செய்து அதனுள் `Trash' எனும் மெனுவினை தேர்வு செய்யுங்கள்‌. அதில் நீங்கள் அழித்த புகைப்படங்கள்/வீடியோக்கள் இருக்கும். அவற்றுள் உங்களுக்குத் தேவையானவற்றை select செய்து Restore கொடுத்தால், திரும்ப கேலரிக்கே வந்து விடும்.

செல்போன்How To: அழுக்கான சுவரை சுத்தம் செய்வது எப்படி? How To Clean A Dirty Wall?

ஒருசில போன்களில் கேலரியைத் திறந்தந்துமே கீழே Recently deleted என்கிற தேர்வு இருக்கும். அதனுள் சென்று மேற்சொன்ன நடைமுறையின்படி தேவையானவற்றை மீள எடுத்துக் கொள்ளலாம். ஒட்டுமொத்தமாகத் தேர்வு செய்து ஒரேயடியாக அழிக்கவும் செய்யலாம்" என்கிறார் சர்வேஷ்.

No comments:

Post a Comment