Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, May 2, 2023

செவ்வாய்க்கிழமையை மறக்காதீங்க.... உங்க கடனை எல்லாம் அடைத்து விடும் எளிய பரிகாரம்!


செவ்வாய் கிழமைகளை மறந்துடாதீங்க. உங்க கடனை அடைக்கும் பரிகாரத்திற்கு ஏற்ற தினம் செவ்வாய்க்கிழமை தான்.

உங்க கடன் தீர்ந்துடுச்சுன்னு நெனைச்சுக்கோங்க. இல்லைன்னா இந்த கட்டுரை உங்க கண்ல பட்டிருக்காது. உங்களுக்கு லட்சக்கணக்குல கடன் பிரச்சனை இருந்தாலும், ரொம்ப ஈஸியா அதை எல்லாத்தையும் தீர்த்துடற மாதிரியான மிக எளிய பரிகாரம் ஒன்று இருக்கு. ஆமாங்க. நிஜமாகவே உங்களுடைய அத்தனை கடன் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கிற எளிய பரிகாரம் ஒன்று உள்ளது. அதுக்கு ரெண்டு விஷயம் தான் ரொம்ப முக்கியம். அந்த கடனை அடைத்து விடணும் என்று நீங்கள் முழு மனசோடு செயலில் இறங்கணும். அப்புறமா அந்த பரிகாரத்திற்கு சரியான நாள் செவ்வாய் கிழமை.

செவ்வாய் கிழமைகள் பொதுவாகவே அம்பிகைக்கு உகந்த நாள். நவக்கிரகங்களுள் மிகச்சிறந்தது செவ்வாய் தான். இது தான் மங்கலகரமான கிரகம். செவ்வாய்க் கிழமையன்று எதையும் செய்ய விரும்பாதவர்கள் வாழ்க்கையில் முழுப்பலனை அனுபவிக்கவே முடியாது என்றும் சொல்வதுண்டு. முருகப்பெருமானுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை தான்.

திங்கள், புதன், வியாழன், வெள்ளி நல்ல காரியங்களைச் செய்வதற்கு ஏற்ற நாள் என்று நினைப்பார்கள். ஆனால் நல்ல நாளாக இருந்தாலும் பிரதமை, அஷ்டமி, நவமி திதிகள் வரும் நாட்களைத் தவிர்க்க வேண்டும். செவ்வாய்கிழமையும் உகந்த நாள் தான். மெளன அங்காரக விரதம் ஒன்று உண்டு. தர்ம சாஸ்திரத்தில் இதைப் பற்றி மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையன்று மெளனவிரதம் அனுஷ்டித்தால் யாகம் செய்த பலனை ஒருவர் அடையலாம் என்கிறது.


அதாவது செவ்வாய்க் கிழமையன்று எந்த ஒரு தர்க்கத்திலும் ஈடுபடக்கூடாது. அப்படி விவாதம் செய்தால் அது நிச்சயம் தீமையில் சென்று முடியும். அதனால் தான் செவ்வாயோ வெறும் வாயோ என்று, அன்றைய தினம் வாதம் செய்யாமல் மெளன விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது தான் உண்மையான பழமொழி.

இயற்கையிலேயே செவ்வாய் விசுவாசம் நிறைந்த பணியாளாக இருந்தாலும் மூர்க்க குணம் நிறைந்தவர். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எதையும் யோசிக்காமல் வேகமாக செயல்படக்கூடியவர். அன்றைய தினம் நாம் செய்யும் செயல்கள் தொடரும் என்பதால் தான் கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பித் தரும் போது செவ்வாய்க்கிழமை தந்தால் வெகு சீக்கிரமே கடன் அடையும். தொடர்ந்து மூன்று செவ்வாய் கிழமைகளில் உங்கள் கடனின் ஒரு பகுதியைக் கொடுத்து வர, கடன் விரைவில் அடைப்படும்.


மீண்டும் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படாது என்று கூறுவதுண்டு. இந்த நாளில் செவ்வாய் தோஷத்திற்கான பரிகார சாந்தி, துர்கா ஹோமம், ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படையில் செய்யும் ஆயுஷ்ய ஹோமம் , சஷ்டி அப்த பூர்த்தி போன்றவற்றைச் செய்யலாம். மனையடி சாஸ்திரம் செவ்வாயன்று பூமி பூஜை செய்வது நல்லது என்றே கூறுகிறது. பயணங்களில் கிழக்கு திசை நோக்கிய பயணம், செவ்வாயன்று இருந்தால் உறுதியான வெற்றியைத் தரும். ஆனா, மிக முக்கியமான விஷயம் ஒண்ணு இருக்கு. நிஜமாகவே கடன் அடைய வேண்டும் என்கிற நம்பிக்கையோடு நீங்கள் இதைச் செய்து வர வேண்டும். கடன் கொடுத்தவங்களை ஏமாற்றலாம் என்று நினைத்து செய்ய கூடாது. 

No comments:

Post a Comment