Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, May 10, 2023

தொப்பையை கரைக்கும் கறிவேப்பிலை ஜூஸ்..


நம்மில் பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு மற்றும் எடை குறைவு. என்ன செய்தாலும் இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைப்பதில்லை.

ஆனால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த கறிவேப்பிலை சாற்றை குடித்து வந்தால், முடி உதிர்வு குறைவதுடன், உங்களின் அடம்பிடிக்கும் தொப்பையையும் குறைக்கலாம்.

அதுமட்டும் அல்ல, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் இது உதவும். அதிக அளவில் ஆரோக்கிய நன்மைகளை கொண்ட கறிவேப்பிலை ஜூஸ் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் காணலாம்.

தேவையான பொருட்கள் :

நெல்லிக்காய் - 2.
கறிவேப்பிலை - 1 கைப்பிடி.
இஞ்சி - 2 இன்ச் அளவு.
மஞ்சள் துண்டு - 2.
எலுமிச்சை - 1.
உப்பு - ஒரு சிட்டிகை.


செய்முறை :

முதலில் ஜூஸ் செய்ய எடுத்துக்கொண்ட நெல்லிக்காய், இஞ்சி, மஞ்சள் துண்டு ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து பின் பொடியாக நறுக்கி தயாராக வைக்கவும்.

இதை தொடர்ந்து ஒரு மிக்ஸி ஜாரில் நற்றுகிய நெல்லிக்காய், மஞ்சள் மற்றும் இஞ்சி ஆகியவற்றுடன் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.

பின், அதில் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து தனி ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.

இதனிடையே எடுத்துக்கொண்ட எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி - சாறு புழிந்து தனியே எடுத்து வைக்கவும்.

தற்போது அரைத்து வைத்த கறிவேப்பிலை சேர்மத்துடன் இந்த எலுமிச்சை சாறு மற்றம் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக்கொள்ள கறிவேப்பிலை ஜூஸ் தயார்.

சிறிதளவு கசப்புடன் காரம் காணப்படும் இந்த ஜூஸில், சுவை வேண்டுமென்றால் சிறிதளவு தேன் சேர்த்து கலந்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் வடிகட்டியும் சாப்பிடலாம்.

முறையாக தயார் செய்த இந்த ஜூஸினை, ஒரு கோப்பையில் ஊற்றி பின் இதன் மீது புதினா இலைகளை வைத்து பரிமாறலாம்.

No comments:

Post a Comment