தமிழ்நாடு அரசு எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு தொழில் முனைவோர்களுக்கு சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தை தமிழக அரசு இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள எஸ்.சி. மற்றும்எஸ்.டி. பிரிவு தொழில் முனைவோர் தொடங்கவிருக்கும், உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த நேரடி வேளாண்மை தவிர்த்த தொழில் திட்டங்களுக்கும் வங்கி கடன் உதவியோடு மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பதாரர்களுக்கு எந்தவித கல்வித்தகுதியும் ‘தேவையில்லை, வயது வரம்பு 55-க்கு மிகாமல் இருக்க வேண்டும். புதிய தொழில் முனைவோராகவும் ஏற்கனவே தொழில் தொடங்கி அதனை விரிவு படுத்தவிரும்புவோரும் விண்ணப்பிக்கலாம்.
அதிக பட்ச மானிய தொகை 1.5 கோடியும்,மாதாந்திர வட்டி தொகையில் 6 சதவீதத்திற்கு வட்டி மானியமும், மொத்ததிட்டத் தொகையில் 65 சதவித வங்கி கடனாகவும், 85 சதவீத அரசின் மானியமாகவும் வழங்கப்படும்.
எனவே பயனாளர்கள் தம் பங்காக விளிம்புத் தொகை செலுத்த வேண்டிய தேவை இல்லை. www.msmeonline.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment