தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ரேஷன் கடை பொருள்களுக்காக அரசு சார்பாக 10500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பல ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு முறையாக ரேஷன் பொருட்களை வழங்காமல் கள்ளச் சந்தையில் பொருட்களை விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதேசமயம் பல ரேஷன் கடைகளில் வெளி மாநிலத்திற்கும் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகின்றது. மேலும் மாத இறுதியில் ரேஷன் அட்டைதாரர்கள் வாங்காத பொருள்களுக்கும் வாங்கியதாக ரேஷன் கடை ஊழியர்கள் பதிவு செய்கின்றனர். இப்படி பல்வேறு புகார்கள் எழுந்து உள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உணவுத்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment