Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 26, 2023

நைட் தூங்கும் முன் ஒரு துண்டு தேங்காய் சாப்பிடுங்கள்



நம் அனைவருக்குமே தேங்காய் ஆரோக்கியமான ஓர் உணவுப் பொருள் என்பது தெரியும். இந்த தேங்காயை அன்றாடம் நாம் பல வழிகளில் பயன்படுத்தி வருகிறோம்.

அதில் தேங்காய் எண்ணெயில் இருந்து தேங்காய் பொடி வரை மற்றும் பச்சையாகவோ அல்லது காய்ந்த நிலையிலோ தேங்காயை சாப்பிடுகிறோம். மேலும் தேங்காயின் நீரையும் குடிக்கிறோம். இப்படிப்பட்ட தேங்காய் அதன் சத்துக்களால் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.

தேங்காயில் புரோட்டீன் மற்றும் வைட்டமின் சி மட்டுமின்றி அனைத்து வகையான கனிமச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இதனால் இது உடலுக்கு பல வழிகளில் நன்மையளிக்கிறது. இது தவிர, தேங்காயில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளும் உள்ளது. இத்தகைய தேங்காயை இரவு தூங்குவதற்கு முன்பு சாப்பிட்டால் இன்னும் சிறப்பான நன்மைகளைப் பெறலாம்.

ஆம், இரவு தூங்க செல்லும் முன் தேங்காயை சாப்பிட்டால், நல்ல தூக்கம் கிடைப்பதோடு, பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். இப்போது இரவு தூங்கும் முன் ஒரு துண்டு தேங்காயை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

மலச்சிக்கல் தடுக்கப்படும்

தேங்காயில் நார்ச்சத்து உள்ளது. எனவே இரவு தூங்கும் முன் தேங்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது. இது தவிர, வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். ஆகவே உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை அல்லது பிற செரிமான பிரச்சனைகள் இருந்தால், தினமும் தூங்கும் முன்பு ஒரு துண்டு தேங்காயை சாப்பிட்டுவிட்டு தூங்குங்கள்.

இதய நோய் தடுக்கப்படும்

தேங்காயை இரவு தூங்கும் முன் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது. எப்படியெனில் தேங்காயில் உள்ள கொழுப்பு உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை மேம்படுத்தும். இதன் விளைவாக, தேங்காயை இரவு நேரத்தில் சாப்பிடுவது இதயம் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கும்.

உடல் எடையை கட்டுப்படுத்தும்

இன்று ஏராளமான மக்கள் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பது பெரிய பிரச்சனையாகிவிட்டது. ஆனால் தேங்காயை சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுவும் இரவு தூங்கும் முன் தேங்காயை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு, மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுத்து, உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை குறைக்கவும் உதவியாக இருக்கும். இது தவிர, தேங்காயை சாப்பிடுவதால் உடலின் மெட்டபாலிசமும் சீராக இருக்கும்.

சருமத்திற்கு நல்லது

உங்களுக்கு பருக்கள் அல்லது சருமத்தில் தழும்புகள் இருந்தால், இவை அனைத்தையும் நீக்க தேங்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுவும் இரவு தூங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் ஒரு துண்டு தேங்காயை சாப்பிட்டால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்திற்கும் நிவாரணம் கிடைக்கும்.

நிம்மதியான ஆழ்ந்த தூக்கம்

தற்போதைய பிஸியான உலகில், மக்களிடையே தூக்கமின்மை பிரச்சனை அதிகமாக உள்ளது. நீங்களும் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவராயின், இரவு தூங்குவதற்கு அரை மணிநேரத்திற்கு முன் தேங்காயை சாப்பிடுங்கள். இதன் முலம் உங்களின் தூக்கமின்மை பிரச்சனை நீங்கி, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவீர்கள்.

No comments:

Post a Comment