திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பாமணி கிராமத்தில் உள்ள உரத்தொழிற்சாலையை கூட்டுறவுதுறை அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் சாரு ஶ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரிய கருப்பன், பாமணி தொழிற்சாலை வளாகத்தில் விரைவில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சிங் சல்பேட் உரம் தயாரிக்கும் ஆலை நிறுவப்பட உள்ளதாகவும், மேலும் ரூ. 1.40 கோடியில் மண்புழு மூலம் உரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க உள்ளதாகவும் இவை அனைத்தையும் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் கூறினார்.
மேலும் இவ்வாலையின் பராமரிப்பு பணிகளுக்காக ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த சிங் சல்பேட் தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுவதன் மூலம் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
ரேசன் கடை ஊழியர்கள் நியமனம் குறித்து சிலர் நீதிமன்றங்களுக்கு சென்றுள்ளனர். இது குறித்து அரசு சார்பில் உரிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு நீதிமன்றம் கால நீட்டிப்பும் கொடுத்துள்ளது. இந்நிலையில் நியாய விலை கடை ஊழியர்கள் குறித்த பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment