Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 26, 2023

வெறும் ஆறு நாள்களில் சிறுநீரக கல் பிரச்சனையை குணப்படுத்தலாம்.!!

சிறுநீரக கல் பிரச்னையை போக்க கூடிய ஒரு சில உணவு வகைகளை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பீன்ஸ்:

ஒரு நாள் விட்டு ஒரு நாள் கால் கிலோ பீன்ஸ் (ஃபிரஞ்சு பீன்ஸ்) வாங்கி, விதை மற்றும் நார் நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்து குடிக்க வேண்டும். குடித்து 10 நிமிடம் கழித்து 2 லிட்டர் நீரை சிறிது இடைவெளி விட்டு குடிக்க வேண்டும். இன்னும் அதிகமான நீரை குடிக்க முடிந்தால் குடிக்கலாம். அப்படி நாம் குடிக்கும் போது கல் உடைந்து கண்டிப்பாக நீரில் வெளியாகிவிடும்.

திராட்சை:
திராட்சை பழத்தில் உள்ள நீரும், பொட்டாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்கும். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினைக்கு நல்ல தீர்வாக இருக்கும்.

மாதுளம் பழம்:

மாதுளம் பழத்தின் சாறை பிழிந்து ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாற்றுடன் சேர்த்து சாப்பிட்டால், கல் பிரச்சினை தீரும்.

அத்திப்பழம்:

கொதிக்க வைத்த அத்தி பழச்சாற்றை வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து காலையில் காலி வயிற்றில் பருகினால் பலன் கிடைக்கும்.

துளசி இலை:

துளசி இலையின் சாருடன் தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம். நம் உடலில் கல் உருவாகாமல் இருக்க முன்னெச்சரிக்கைக்காக இதை அருந்தலாம். கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம் ஆகும்.

தண்ணீர்பழம்:

நீரின் அளவு அதிகம் உள்ள பழத்தில் பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம். ஆகவே தண்ணீர்பழம் அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீரும்.

ஆப்பிள்:

ஆப்பிள் அனுதினமும் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அடிக்கடி ஆப்பிள் சாப்பிட்டால் கல் உருவாகாமல் தடுக்கலாம்.

வாழைத்தண்டு ஜூஸ்:

நாம் அடிக்கடி வாழைத்தண்டு ஜூஸ் மற்றும் வாழைத்தண்டு பொரியல் சாப்பிட்டு வந்தால் கல் உருவாவதை தடுக்கலாம் மற்றும் கல் உருவானதை உடைக்கவும் செய்யலாம்.

இளநீர்:

தினமும் இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொண்டாலும் கல் உருவாவதை தடுக்கலாம். மேலும் குடிக்கும் தண்ணீரின் அளவு தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை அதிகரித்தால் கல் உருவாவதை தடுக்கலாம்.

குறிப்பாக இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு வாய்ப்பே இல்லையென்பதால் தைரியமாக இந்த முறையை அனைவரும் பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.

No comments:

Post a Comment