இந்தியாவில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
மத்திய அரசே இதற்கு ஒப்புதல் வழங்காத நிலையில் ஹிமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் பணியில் இருக்கும் போது ஓய்வூதியத்திற்கு பணம் சம்பாளத்தில் பிடித்தம் செய்யப்படாது.
ஆனால் புதிய ஓய்வூதிய திட்டத்தில் 10 முதல் 14 சதவீதம் வரை சம்பளத்திலிருந்து பிடிக்கும் செய்யப்பட்டு அதன் மூலமாக ஓய்வூதியம் கிடைக்கும். ஆனால் அதற்கு உத்திரவாதம் கிடையாது. இந்நிலையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கு ஏற்ப பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதில் உத்திரவாத ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் அதில் 40 சதவீதம் வரை உத்திரவாத தொகை ஊழியர்களுக்கு வழங்கலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment