Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 14, 2023

காவல் சார்புஆய்வாளர்கள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

காவல் சார்பு ஆய்வாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையர் வீரராகவ ராவ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் பட்டதாரி கல்வி தகுதியில் காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை) உள்ளிட்ட 621 பணி காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த மாதம் 5ம் தேதி வெளியிடப்பட்டது. கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு வயது வரம்பு 1.7.2023 அன்று O/C – 20-30, BC, MBC, BCM-20-32, SC/ST/SCA – 20-35க்குள் விண்ணப்பிக்க கடைசி நாள் இந்த மாதம் 30ம் தேதி ஆகும். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி https://www.tnusrb.tn.gov.in ஆகும். இப்பயிற்சி வகுப்பிற்கு சேர, விருப்பமும், தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக கலந்து கொள்ளலாம். இப்பணிகாலியிட தேர்வு தொடர்பாக, https://www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News