தி.மு.க. தேர்தல் அறிக்கையில், 'குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் ஆட்சிக்கு வந்தது, இந்தத் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதனையடுத்து அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் எனவும், இந்த 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்திற்காக ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுவிட்டன.
இந்த நிலையில் விண்ணப்ப படிவத்தில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் வயது தொழில் , மாத வருமானம் வருமானவரி வங்கி, ஆதார் எண், குடும்ப அட்டை எண் உள்ளிட்ட 13 கேள்விகள் விண்ணப்ப படிவத்தில் இடம் பெற்றுள்ளன. மேலும் தொலைபேசி எண், வசிப்பது சொந்தவீடா வாடகை வீடா என்றவிவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. சொத்து விவரங்கள் நிலை உடைமை, வாகனவிவரங்களும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். மேலும் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்போர் ஆதார் அட்டை , குடும்ப அட்டை, மின் கட்டண அட்டை மற்றும் வங்கி பாஸ் புத்தகம் உள்ளிட்டவை விண்ணப்பிக்கும் முகாமிற்கு எடுத்துவர வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இதில் பூர்த்தி ஆகும் பெண்களுக்கு மட்டுமே 1000 வழங்கப்பட இருக்கிறது.அதில் முக்கியமாக, எனது குடும்ப உறுப்பினர்களுக்குக் கூட்டாக 5 ஏக்கர் நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு மேல் இல்லை என்றும் விண்ணப்பத்தில் என்னால் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை என்றும் தவறான தகவல்களைக் கொடுத்து மகளிர் உரிமைத் தொகை பெற்றது கண்டறியப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிவேன் என்றும் கூறப்பட்டுள்ளது.
உங்களுக்கு பணம் கிடைக்குமானு செக் பண்ணிக்கோங்க.
No comments:
Post a Comment