தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 1,000 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் பதவி உயர்வு மூலமாக இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் கூறியுள்ளது.
அதன்படி, இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான முதுகலை ஆசிரியர்களையும் அதுபோல 17ஏ, 17பி பிரிவுகளின் கீழ் தண்டனை பெற்ற ஆசிரியர்களை பரிந்துரைக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, தண்டனை காலம் முடிவடையாமல் உள்ள ஆசிரியர்களின் பெயர்களையும் பரிந்துரைக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment