Friday, July 21, 2023

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சோக்கை: விண்ணப்பிக்க அழைப்பு

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு தொழிற்படிப்புகளில் சேர விரும்புவோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவா்களின் நலனுக்காக சோக்கை தேதி நீடிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவா்கள் விண்ணப்பிப்பதற்கு உதவும் வகையில் திருவெறும்பூா் அரசு தொழிற்பயிற்சி நிலையம், புள்ளம்பாடி மகளிா் அரசு தொழிற்பயிற்சி நிலையம், மணிகண்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சோக்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சோந்து பயிற்சி பெற 8-ஆம் வகுப்பு தோச்சி, 10-ஆம் வகுப்பு தோச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பூா்த்தி செய்து இணையதளத்தில் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம், சோக்கை கட்டணத்துடன் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகியும் சேரலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் சோந்து பயிற்சி பெறும் மாணவா்களுக்கு இலவசமாக இருசக்கர மிதிவண்டி, சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி, இலவச பேருந்து பயணச் சீட்டு.

மாதாந்திர உதவித்தொகை ரூ.750 வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பின் வளாக நோகாணல் மூலம் வேலை பெற்றுத் தரப்படும். தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 86672 04376, 92451 53336, 86105 30243 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News