Subscribe Us

Friday, July 21, 2023

மகளிா் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் வழங்கும் பணி தொடக்கம்

திருவாரூரில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. திருவாரூா் மாவட்டத்தில், கலைஞா் மகளிா் உரிமைத் திட்ட விண்ணப்பப் பதிவு முகாம் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன.

முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4- ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 5 முதல் 16- ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன. இம்முகாம்கள் நடைபெறுவதற்கு 4 நாள்களுக்கு முன்னதாக, முகாம் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் வீடுவீடாகச் சென்று வழங்கப்படும். 

முதல் கட்டமாக மன்னாா்குடி, திருவாரூா், நீடாமங்கலம், வலங்கைமான், கொரடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைப் பகுதிகளில் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருவாரூா் நகா் பகுதியில் மகளிா் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டன. 12- ஆவது வாா்டில் திமுக நகரச் செயலாளரும், நகராட்சி நியமனக் குழு உறுப்பினருமான எஸ். பிரகாஷ், வீடுகளுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பப் படிவங்களை வழங்கினாா்.

No comments:

Post a Comment

Popular Feed