அதன்படி பெருஞ்சீரகத்தின் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.
பெருஞ்சீரகம் ஒரு இயற்கையான வாய் ப்ரெஷ்னர், இது உணவு பொருட்களின் சுவையை அதிகரிக்க உதவுகிறது. குறிப்பாக செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வாக பெருஞ்சீரகம் பயன்படுகிறது.
பெருஞ்சீரகம் இந்தியா மட்டுமில்லாமல் பிரெஞ்சு மற்றும் இத்தாலி போன்ற சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் தனித்துவமான வாசனை மற்றும் சுவையை தவிர பல மருத்துவ நன்மைகளை உள்ளடக்கியது.
அதன்படி உடல் எடையை கட்டுப்படுத்த ரோமானியர்கள் பெருஞ்சீரகத்தை பயன்படுத்தி உள்ளனர். இந்தியாவிலும் சாப்பிட்ட பிறகு வெறும் பெருஞ்சீரகம் அல்லது இனிப்பு பூசப்பட்ட மிட்டாய் போல பெருஞ்சீரகம் மென்று சாப்பிடுவதால் செரிமானத்தை சீராக்குகிறது.

பெருஞ்சீரகத்தில் உள்ள கால்சியம், வைட்டமின் சி, இரும்பு சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை உடல் எடையை குறைப்பது மட்டுமில்லாமல் புற்று நோய் ஏற்படுவதையும் தடுக்கிறது.
மேலும் பெருஞ்சீரகத்தை வெறும் வாயில் போட்டு மென்று தண்ணீர் குடித்தால் வாயத் தொல்லை பிரச்சினைகள் குணமாகும்.
மேலும் பெருஞ்சீரகத்தில் உள்ள வைட்டமின் சி உடலில் ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவுகிறது. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் பெருந்தீரகம் மென்று வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.
No comments:
Post a Comment