கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு மெழுகுப் பொருள். இது ஒரு வகை கொழுப்பு அமிலமாகும். இது கல்லீரலால் உற்பத்தி செய்யப்படுகிறது.
இது உடலுக்குள் செல்களை உருவாக்குவதற்கு உதவுகிறது. இது தவிர, ஹார்மோன்கள், பித்த அமிலம் மற்றும் வைட்டமின் டி போன்றவற்றை ஒருங்கிணைக்கும் சில முக்கியமான செயல்பாடுகளைச் செய்ய உடல் கொலஸ்ட்ராலைப் பயன்படுத்துகிறது. இருப்பினும், அதன் அளவு கட்டுப்பாடில்லாமல் அதிகரிக்கும் போது, குறிப்பாக கெட்ட கொலஸ்டிரால் அதிகரிக்கும் போதும் அது சில கடுமையான உடல் நலப் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். இதய நோய் முதல் பக்கவாதம் வரை, இரத்தத்தில் அதிக கொழுப்பு அளவு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை வரவழைக்கலாம். கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளன, அவற்றில் ஒன்று எளிதான வாழ்க்கை முறை மாற்றங்கள் (நீரிழிவை நிர்வகித்தல், எடையைக் கட்டுக்குள் வைத்திருத்தல் போன்றவை). ஆனால், கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், அடைப்பட்ட நரம்புகளைத் திறக்க உதவும் சில ஆயுர்வேத மூலிகைகள் உள்ளன.
கொழுப்பை எரிக்கும் ஆயுர்வேத மூலிகைகள்
கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் சில ஆயுர்வேத மூலிகைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இவற்றில் சில உங்கள் சமையலறை சரக்கறையில் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள் தான்.
கொத்தமல்லி அல்லது தனியா
இந்தியாவில் தானியா என்றும் அழைக்கப்படும் கொத்தமல்லி சமையலறைகளில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மூலிகையாகும். கொத்தமல்லி சிறந்த மூலிகை டையூரிடிக் முகவர்களில் ஒன்றாகும். இது சிறுநீரகங்களுக்கு புத்துயிர் அளிக்கும் மற்றும் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் போது சிறப்பாக செயல்பட உதவும். இது சிறுநீரகங்கள் மூலம் உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்பை எரித்து வெளியேற்ற உதவுகிறது.
துளசி
துளசி இரத்த ஓட்டத்தில் அதிக கொழுப்பின் அளவைக் குணப்படுத்தும் மற்றொரு சிறந்த ஆயுர்வேத மூலிகையாகும். துளசி இலைகள் சிறுநீரகத்தின் மூலம் அதிகப்படியான கொழுப்பை அகற்றும். இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைப்பதில் துளசி இலைகள் மிகவும் திறமையானவை, தினமும் 2-3 இலைகளை சாப்பிட்டு வர கெட்ட கொழுப்பு குறைய உதவும்.
குங்குலு
குங்குலு பிரபலமான ஆயுர்வேத மூலிகைகளில் ஒன்றாகும், இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் அதிக கொழுப்புக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலிகையில் guggulsterone உள்ளது, இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த மூலிகையாக அறியப்படுகிறது. கெட்ட கொலஸ்ட்ராலில் இருந்து விடுபட ஒருவர் 25 மில்லி கிராம் வரை குங்குலுவை உட்கொள்ளலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது உணவுக்குப் பிறகு (ஏதேனும்) எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
அல்ஃப்ல்ஃபா
அல்ஃப்ல்ஃபா என்னும் குதிரை மசால் அதிக கொலஸ்ட்ராலை எரிக்கும் சிறந்த ஆயுர்வேத வீட்டு வைத்தியங்களில் ஒன்றாகும். இரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதால் தமனிகளில் ஏற்படும் அடைப்பை அழிக்கும் திறன் இதற்கு உள்ளது. இதனை சாறுடன் (தினசரி) சாப்பிடலாம். இருப்பினும், உங்கள் உணவில் இதனை சேர்ப்பதற்கு முன், ஆயுர்வேத மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.
பூண்டு
பூண்டு, கெட்ட கொழுப்பைத் தடுக்க உதவும் மற்றொரு சிறந்த ஆயுர்வேத மூலிகையாகும். பூண்டு பல நூற்றாண்டுகளாக மனிதகுலத்திற்கு பரிச்சயமான பொருள். அதிக கொழுப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். தினமும் இரண்டு பூண்டு பற்கள் உடலில் உள்ள உயர் இரத்த கொழுப்பை விரைவாக எரிக்க உதவும். பூண்டு ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.
அர்ஜுனா
அர்ஜுனா மற்றொரு சக்திவாய்ந்த ஆயுர்வேத மூலிகையாகும், இது மாரடைப்பு போன்ற இதய நோய்களைக் கையாள்வதில் உதவுகிறது. அர்ஜுனா மரத்தின் பட்டையை பொடி வடிவில் உட்கொள்ளலாம். எனினும், ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு அளவைத் திட்டமிடுங்கள். அர்ஜுனா பவுடர் கொலஸ்ட்ராலை கரைத்து, இதய அடைப்பு ஏற்படாமல் தடுக்கும் திறன் கொண்டது. ஒருவர் காலையில் (காலை உணவுக்கு முன்) வெதுவெதுப்பான நீரில் பொடியை உட்கொள்ளலாம்.
No comments:
Post a Comment