Wednesday, July 19, 2023

நெஞ்செரிச்சலால் அடிக்கடி அவதிப்படுபவரா? உங்களுக்கான வீட்டு வைத்தியக் குறிப்புகள்!

நமது உணவுக்குழாய் தசை பலவீனமாக இருக்கும்போது வயிற்றில் உள்ள அமிலத்தை மீண்டும் மேலே உணவுக் குழாய்க்கு உந்தப்படுவதை அசிடிட்டி என்கிறார்கள்.

இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. அதற்கான காரணங்கள், தடுப்பு முறைகள், வீட்டு வைத்தியக் குறிப்புகள் ஆகியவற்றை இங்கே காண்போம்.அசிடிட்டிக்கான பொதுவான காரணங்கள் அதிகமாக சாப்பிடுவதுகண்ட நேரத்தில் சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் இருப்பது டீ, காபி, காரமான, எண்ணெய் மிகுந்த உணவுகள், குளிர்பானங்கள் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்வது.வயிற்றுப்புண், ஜி.இ.ஆர்.டி., எனும் கேஸ்ட்ரோ ஈசோபாகஸ் ரிஃப்ளக்ஸ் நோய் அதிக மன அழுத்தம், குறைவான தூக்கம், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற மோசமான வாழ்க்கை முறை... இவைகள் தான் அசிடிட்டி ஏற்படுவதற்கான காரணங்கள்.அசிடிட்டிக்கான வீட்டு வைத்தியம்அமிலத்தன்மை மற்றும் அதன் அறிகுறிகளான வாய்வு, அஜீரணம், குமட்டல், இரைப்பை எரிச்சல் போன்றவற்றிலிருந்து விடுபட ஒரு கிராம்பு துண்டினை வாயில் அடக்கி மெல்லுங்கள். இரவில் தூங்கச் செல்லும் முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை வெறும் வயிற்றில் குடித்துவிட்டு சென்றால் அசிடிட்டியை போக்கும்.

தினம் இரண்டு ஏலக்காயை மெல்லுவது அமிலத்தன்மை, வாய்வு மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும். ஒரு கிளாஸ் தர்பூசணி சாறு அமிலத்தன்மையைப் போக்குவதில் பயனுள்ளதாக இருக்கும்.ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் பெருஞ்சீரகத்தைப் பொடி செய்து குடிப்பதால், அமிலத்தன்மை மற்றும் அதன் அறிகுறிகளான நெஞ்செரிச்சல், வயிறு இரைச்சல் சரியாகும். ஒரு சிறிய கட்டி வெல்லத்தை வாயில் அடக்கினாலும் அசிடிட்டியின் அறிகுறிகள் சரியாகும். ஏனென்றால் வெல்லத்தில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரண்டும் உள்ளது.

பொட்டாசியம் பி.எச்., சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இதனால் அமிலத்தன்மை அதிகமாகாமல் தடுக்கப்படும். செரிமான அமைப்பை வலுவாக வைத்திருக்கவும், சாதாரணமாக செயல்படவும் மெக்னீசியம் உதவி புரிகிறது. மோரும் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சீராக்குகிறது.

அதில் உள்ள லாக்டிக் அமிலம் இதற்கு பயன்படுகிறது. மிளகு மற்றும் கொத்தமல்லியுடன் ஒரு கிளாஸ் மோர் அமிலத்தன்மையை குறைக்கும். இஞ்சி டீ குடிப்பது அமிலத்தன்மை மற்றும் அதன் அறிகுறிகளைத் தடுக்க உதவும்.வாழைப்பழமும் அமிலத்தன்மையை சரிசெய்யும்.அடுத்த முறை நெஞ்சரிச்சலால் அவதிப்படாமல் இருக்க. இவற்றில் ஏதேனும் ஒன்றை முயற்சி செய்யுங்கள்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News