Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 12, 2023

விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் இரவு நேர பாடசாலை திட்டம் - ஆசிரியர்களை தேர்வு செய்ய அறிவுறுத்தல்!!!

விஜய மக்கள் இயக்கம் சார்பில் 234 தொகுதிகளிலும் இரவுநேர பாடசாலை திட்டம் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 15 ஆம் தேதி முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றது போலவே தனது அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்படுகின்றன. சமீபத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒவ்வொரு தொகுதியிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகள் என 234 தொகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத் தொகை வழங்கினார் விஜய்.

அப்போது பேசிய நடிகர் விஜய், நாளை வாக்காளர்களான இன்றைய மாணவ மாணவிகள், தங்களின் பெற்றோர் ஓட்டுக்கு பணம் வாங்குவதை தடுக்க வேண்டும் என்றார். மேலும் அம்பேத்கர், பெரியார், காமராஜன் ஆகிய தலைவர்கள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். விஜய்யின் இந்த நடவடிக்கையை அவரது அரசியல் வருகைக்கான முன்னோட்டம் என்று கூறி வருகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

இந்நிலையில் நடிகர் விஜய் நேற்று தனது பனையூர் இல்லத்தில் தன்னுடைய மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தற்போது நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் இரவு நேர பாடசாலை திட்டம் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வரும் ஜூலை 15 ஆம் தேதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட முடிவு செய்து இந்த திட்டத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரவு நேர பாட சாலைக்கான இடம் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் தேர்வு செய்து தரப்படம் என்றும் இதற்கான வாடகையும் விஜய் மக்கள் இயக்கத்தால் கொடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இரவு நேர பாட சாலைக்கான ஆசிரியர் பணிக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் குறைந்தபட்ட கல்வி தகுதியாக இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்கம் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் 4 இடங்களுக்கு மேல் இந்த இரவு நேர பாடசாலை அமைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மாணவ மாணவிகளை சந்தித்த நடிகர் விஜய், அசுரன் படத்தின் வசனத்தை கூறி கல்விதான் முக்கியம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை விஜய் மக்கள் இயக்கம் எடுத்திருப்பது கவனத்தை பெற்று வருகிறது.


இதனிடையே நேற்று பனையூர் பங்காளவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு சென்ற நடிகர் விஜய், சிக்னலில் நிற்காமல் போக்குவரத்து விதிகளை மீறி சென்றார். இதற்காக அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அந்த தொகையை ஆன்லைன் மூலம் நடிகர் விஜய் செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment