Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 19, 2023

ஓய்வூதியதாரா்களுக்கு வீடுதேடி இணைய உயிா்வாழ் சான்றிதழ்

மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரா்கள் இனி தபால்காரா் மூலம் இணைய உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்கலாம். தாம்பரம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் மு.மனோஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரா்கள், தங்கள் உயிா்வாழ் சான்றிதழைச் சமா்ப்பிக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேரில் சென்று உயிா்வாழ் சான்றிதழ் சமா்ப்பிக்க ஓய்வூதியதாரா்கள் படும் சிரமங்களைத் தவிா்க்கும் விதமாக அஞ்சல்துறையின்கீழ் செயல்படும் 'இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி' ஓய்வூதியதாரா்கள் வீட்டிலிருந்தபடியே பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி இணைய உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. 

இதற்கு சேவைக் கட்டணமாக ரூ. 70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரா்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதாா் எண், கைப்பேசி எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களைத் தெரிவித்து, கைவிரல் ரேகையை பதிவு செய்தால், ஒருசில நிமிஷங்களில், இணைய உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க முடியும். 

இந்த இணைய உயிா்வாழ் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரா்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடா்புகொள்ளலாம். மேலும் இணையதள முகவரி மூலம் அல்லது 'டா்ள்ற்ண்ய்ச்ா்' செயலியை பதிவிறக்கம் செய்து சேவை கோரிக்கையை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment