Monday, July 17, 2023

SMC-ல் பள்ளியில் பயிலாத குழந்தைகளின் பெற்றோர் இடம்பெறக் கூடாது - பள்ளிக்கல்வித் துறை

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுவின் (எஸ்எம்சி) உறுப்பினர்கள் தவிர்க்க இயலாத காரணங்களால் தொடர முடியாத சூழலின்போது செய்ய வேண்டிய பணிகள் குறித்து கூடுதல் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, எஸ்எம்சி குழுத் தலைவர் உட்பட உறுப்பினர்களின் குழந்தைகள் வேறு பள்ளிக்கு மாறினாலோ அல்லது குடும்ப பொருளாதாரத் தேவை உட்பட ஏதேனும் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தாலோ, அந்த குழந்தையின் பெற்றோர் பள்ளியின் எஸ்எம்சி குழு உறுப்பினராக தொடர முடியாது.

அவ்வாறு காலியாகும் உறுப்பினர்களின் இடத்தில் வேறு ஒரு பெற்றோரை நியமிக்க இயலாது. அதன் பதவிக்காலம் முடியும் வரை அந்த இடம் காலியாக வைக்கப்பட வேண்டும். எஸ்எம்சி குழுத் தலைவர் பொறுப்பு காலியானால் துணைத் தலைவருக்கு பொறுப்புகள் மாற்றப்பட வேண்டும்.

பள்ளி தலைமையாசிரியர் சுயவிருப்பத்தின் அடிப்படையில் எஸ்எம்சி குழுவில் மாற்றங்கள் செய்யக்கூடாது. இதுகுறித்து அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News