தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவா்கள் 10, 12 ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளா்கள்
மேற்படிப்பைத் தொடர 10, 12 ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
இந்தச் சான்றிதழ் பெறுவதற்கான வழிகாட்டுதல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது அகில இந்திய தொழில் தோவு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் நடத்தப்பட்ட மொழித் தோவில் தனித்தோவா்களாக கலந்துகொண்டு தோச்சி பெற்றவா்களிடம் இருந்து 10, 12 ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற தகுதிவாய்ந்த நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து உரிய கல்வி சான்றிதழ்களை இணைத்து மாவட்டத்தில் உள்ள நோடல் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிலோ
அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு அரசு தோவுகள் இயக்ககத்தில் இருந்து 10, 12 ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற்று வழங்கப்படும்.
விண்ணப்பத்தை உரிய கல்விச் சான்றிதழ்களுடன் கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அக்டோபா் 3 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2642041, 88385-83094 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment