Wednesday, September 6, 2023

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? (பலன்கள் @ செப்.7 - 13)

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) | பலன்கள்: குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் உங்களுக்கு இந்த வாரம் வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும்.

செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு உங்கள் செல்வாக்கை கண்டு பொறாமை உண்டாகலாம். எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும். வீடு மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.

தடைபட்டிருந்த வாகனம் வாங்கும் பணிகள் நிறைவடையும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் வேகம் பிடிக்கும். வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். உத்தியோகஸ்தர்கள் வேலை பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள். அதிகாரமிக்க பதவிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகளால் பெருமை சேரும்.

பெண்களுக்கு காரிய தடைகள் நீங்கும். அரசியல்வாதிகள் வீண் சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். மாணவர்களுக்கு படிக்காமல் விட்ட பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.

பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மனை தரிசித்து பஞ்சமுக தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட மனகுழப்பம் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) | பலன்கள்: தைரியமாக எதிலும் ஈடுபடும் உங்களுக்கு இந்த வாரம் தன்னம்பிக்கை மிளிரும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் தேவை. நிறைவான லாபம் வரும். தொழில் வியாபரம் தொடர்பான அலைச்சல் இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் சொல்படி நடப்பது நல்லது. மேலதிகாரிகள், சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் நன்மை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும். சகோதர் வழியில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். உறவினர்கள் நண்பர்கள் வகையில் அனுகூலம் ஏற்படும்.

பெண்கள் பயணம் செய்யும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். கலைத்துறையினருக்கு புகழும், கவுரவமும் கிடைக்கும். மாணவர்களுக்கு எதிர்கால கல்வியை பற்றி சிந்தனை மேலோங்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: தினமும் மாலை வேளையில் சிவனை வணங்க எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) | பலன்கள்: திட்டமிட்டு எதையும் செய்யும் உங்களுக்கு இந்த வாரம் எடுக்கும் காரியங்கள் வெற்றியை தரும். பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். செலவும் அதற்கு ஏற்றார்போல் இருக்கும். மற்றவர்களது உதவி கிடைக்கும். சாதூர்யமாக பேசி எதிலும் வெற்றி காண்பீர்கள். அனுபவப் பூர்வமான அறிவுத்திறன் அதிகரிக்கும். வழக்குகளில் இருந்து வந்த மந்த நிலை மாறும்.

தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும். உங்களின் ஆலோசனைகள் மேலிடத்தால் அங்கீகரிக்கப்படும். குடும்பாதிபதி சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும்.

பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். சகமாணவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.

பரிகாரம்: துளசியை பெருமாளுக்கு அர்ப்பணித்து வணங்க கடன் சுமை குறையும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:


- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News