Sunday, September 10, 2023

BEO- வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வு (.10.09.2023 ) எழுதுவோர் கவனத்திற்கு – முக்கிய செய்தி

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் 2023ஆம் ஆண்டு வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வு 10.09.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது.

தேர்வர்கள் பின்பற்ற வேண்டியவை:

தேர்வெழுத வருகை தரும் தேர்வர்கள் அனைவரும் காலை 8.30 மணிக்கு தேர்வு மையங்களுக்கு கண்டிப்பாக வருகை தர வேண்டும். தேர்வர்கள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு பிறகே தேர்வு மையங்களின் உள்ளே அனுமதிக்கப்படுவர்.

காலை 9.30 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் எவரும் தேர்வு மையத்திற்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள், தேர்வர்கள் கைபேசி, மடிக்கணினி, கைக்கணினி மற்றும் கால்குலேட்டர்கள் போன்ற உபகரணங்களை தேர்வு மையங்களின் உள்ளே கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டால் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளை தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு எழுத தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News