சின்ன வெங்காயம் இரத்ததில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் இரத்ததில் உள்ள நச்சுக்களை எளிதில் வெளியேற்றி சுத்திகரிக்கச் செய்கிறது.
சின்ன வெங்காயத்தில் புரோட்டீன், நார்ச்சத்துக்கள், கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஜிங்க், காப்பர், போலேட், வைட்டமின் பி, வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
பொதுவாகவே சமையலில் சின்ன வெங்காயம் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் இன்னும் அதன் நன்மைகளை அதிகமாக பெறலாம்.
சின்ன வெங்காயங்களை தோல் உறித்து அதை ஒரு டப்பாவில் போட்டு மூழ்கும் அளவிற்கு தேன் ஊற்றி இரண்டு நாட்கள் அப்படியே வைக்கவும். பின் அதை தேனுடன் ஒரு ஸ்பூன் எடுத்து காலையில் சாப்பிட்டு வரலாம்.
சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடும்போது இரத்ததில் உள்ள நச்சுக்களை எளிதில் வெளியேற்றி சுத்திகரிக்கச் செய்கிறது.
சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடும்போது உடலின் மெட்டாபாலிசம் அதிகரிக்கிறது. இதனால் செரிமான மண்டலத்தையும் ஆற்றல் மிக்கதாக மாற்றுகிறது.
காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் எளிதில் வெளியேற்றப்படுகிறது.
தினமும் தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுகிறீர்கள் எனில் தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயம் பலனளிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்திதான் உடலுக்கு எந்தவித நோயும் வராமல் தற்காத்துக் கொள்ள உதவுகிறது. அந்த வகையில் தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
நெஞ்சு சளி, நுரையீரலுக்கு பாதிப்பை உண்டாக்கும். தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் உண்பதால் நெஞ்சு சளி குணமாகும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்குவதிலும் சின்ன வெங்காயம் சிறந்தது. அப்படியெனில் தொப்பையை குறைப்பதற்கு சின்ன வெங்காயம் உதவியாக இருக்கும்.
No comments:
Post a Comment