டேராடூனில் உள்ள ராணுவ கல்லுாரியில் சேர மாணவர்களுக்கு வாய்ப்பு.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பு:
நடப்பாண்டில், 7ம் வகுப்பு படிக்கும் மற்றும் படித்து முடித்துள்ள மாணவர்கள், உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராணுவ கல்லுாரியில், எட்டாம் வகுப்பில் சேர, டிசம்பர் 2ம் தேதி ராணுவ தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர், www.rimc.gov.in என்ற இணையதளத்தில் உள்ள கமாண்டன்ட், இந்திய ராணுவ கல்லுாரி என்ற முகவரிக்கு, வங்கி வரைவோலை அனுப்பி, விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதன் நகலை, அக்.,15க்குள் டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment