பி.இ., பி.டெக் படிப்புகளுக்கு நடந்த துணை கலந்தாய்வை அடுத்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுப் பிரிவில் 13,244 மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 4,466 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 199.5 மதிப்பெண் பெற்று வேதலட்சுமி என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் B.E, B.Tech, படிப்புகளில் சேர்வதற்கான பொறியியல் துணை கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல் வெளியீட்டுள்ளனர். இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 11ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. பொதுப் பிரிவில் விண்ணப்பித்த மாணவர்கள் இன்று முதல் நாளை மாலை 5 மணி வரை விருப்பக் கல்லூரிகளை பதிவு செய்யலாம் என்று அறிவித்துள்ளனர்.
பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு இன்று தொடங்கியது. பொதுப்பிரிவில் விண்ணப்பித்துள்ள 13,650 பேரில் 13,244 மாணவர்கள் துணை கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள 4,585 மாணவர்களில் 4,446 பேர் துணை கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். பொதுப்பிரிவில் விண்ணப்பித்த மாணவர்கள் இன்று முதல் நாளை மாலை 5 மணி வரை விருப்பக் கல்லூரிகளை பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 8ம் தேதி காலை 10 மணிக்கு வழங்கப்படும் தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை மாலை 5 மணிக்குள் மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். இன்று முதல் 8ம் தேதி வரையில் இணையவழியில் துணை கலந்தாய்வு நடத்தப்படும். அதன் பின்னா் பட்டியலினம், அருந்ததியா் பிரிவில் நிரம்பாமல் காலியாக உள்ள இடங்களில் எஸ்.சி. பிரிவினரை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment