Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, September 7, 2023

ONGC நிறுவனத்தில் அட்டகாசமான வேலை.. 2,500 காலிப்பணியிடங்கள்..!

(ONGC) நிறுவனத்தில் Apprentices பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 20-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.


பணியின் பெயர்: Apprentices

காலிப்பணியிடங்கள்: 2,500

(Northern Sector - 159, Mumbai Sector - 436, Western Sector - 732, Eastern Sector - 593, Southern Sector - 378 (சென்னை - 50), Central Sector - 202)

வயது வரம்பு:

20.09.2023 அன்றைய தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் 18 வயது வயது முதல் 24 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 20.09.1999 அன்றைய நாள் முதல் 20.09.2005 அன்றைய நாளுக்குள் பிறந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

வயது தளர்வுகள்:

SC / ST - 05 ஆண்டுகள்
OBC - 03 ஆண்டுகள்
PWBD - 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை

கல்வி தகுதி:

Apprentices பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, Diploma, Bachelor's Degree, BBA, B.Sc, Graduate Degree ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பின்வருமாறு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

Graduate Apprentices - ரூ.9,000
Diploma Apprentices - ரூ.8,000
Trade Apprentices - ரூ.7,000

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் Merit List என்னும் தேர்வு முறை வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

Apprentices பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 01.09.2023 அன்று முதல் 20.09.2023 அன்று வரை https://ongcapprentices.ongc.co.in/ongcapp/ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment