Join THAMIZHKADAL WhatsApp Group
Join THAMIZHKADAL Telegram Group

Friday, October 20, 2023

இன்று (அக். 20) பள்ளி, கல்லூரிகளுக்கு திடீர் உள்ளூர் விடுமுறை. எங்கு? எதற்கு?

Add This Number In Your Whatsapp Groups -6379884356
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவையொட்டி, மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நாளை (அக். 20) விடுமுறை அறிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளார் (அக்.19) மாலை காலமானார். அவருக்கு வயது 82.

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மாரடைப்பு காரணமாக இன்று மாலை 5 மணியளவில் உயிரிழந்தார்.

அவரின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதனிடையே பங்காரு அடிகளார் மறைவையொட்டி, மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed