Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 8, 2023

ராகு புரட்டி எடுக்க போகும் ராசிக்காரர்கள்


வகிரகங்களும் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இதன் தாக்கமானது 12 ராசிகளுக்கும் இருக்கும்.


மங்கள கிரகங்களின் மாற்றம் சில நேரங்களில் நன்மைகளும், சில நேரங்களில் தீமைகளும் உண்டாக்கும்.


அதேபோல அசுப கிரகங்களாக விளங்கக்கூடிய ராகு மற்றும் கேது இருவரின் மாற்றமும் சில நேரங்களில் நன்மைகள் கொடுத்தாலும் பல நேரங்களில் தீமைகள் உண்டாகும்.


ராகு பகவான் வரும் அக்டோபர் 30ம் தேதி அன்று மீன ராசிக்கு உள் நுழைகிறார். இது சில ராசிகளுக்கு சாதகமான சூழ்நிலையை உண்டாக்கினாலும் சில ராசிகளுக்கு கஷ்டமான சூழ்நிலையை உண்டாக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

ராகு பகவானால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. வேலை செய்யும் இடத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

சிம்ம ராசி

ராகு பகவானால் உங்களுக்கு பல்வேறு விதமான வழிகளில் இருந்து தொந்தரவுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தில் சிக்கல்கள் ஏற்படும். வருமானம் குறைய அதிக வாய்ப்புள்ளது. வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் மற்றும் தொழில் மந்தமான சூழ்நிலை இருக்கும்.

கன்னி ராசி

கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பொருளாதாரத்தில் மந்தமான சூழ்நிலை உண்டாகும். பயணங்களை தவிர்ப்பது நல்லது. வெளியூர் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களோடு கருத்து வேறுபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

No comments:

Post a Comment