Join THAMIZHKADAL WhatsApp Groups

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோரும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பள்ளி வேலை நாட்களில் மாணவர்கள் பெற்றோர்களுடன் சீருடையில் மனு அளிக்க வருவது ஆய்வு அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி இந்நிலையை தவிர்க்கவேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படின் , சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீது துறை நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment