Friday, October 13, 2023

இனி DPI வளாகத்தில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் என எதற்கு அனுமதி கிடையாது - பள்ளிக்கல்வித்துறை


சென்னை டிபிஐ வளாகத்தில் இனி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என எதற்கும் அனுமதி கிடையாது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையை சேர்ந்த ஆசிரியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அண்மையில் *இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு மேலாக உண்ணாவிரத போராட்டம் நடத்தியது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில், சென்னை டிபிஐ வளாகத்தில் இனி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என எதற்கும் அனுமதி கிடையாது என்று பள்ளி கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது*. ராஜரத்தினம் மைதானம், வள்ளுவர் கோட்டம் போன்ற அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்கள் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிபிஐ வளாகத்தில் இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் போராட்டத்தை வாபஸ் பெற்ற நிலையில், பேச்சுவார்த்தை விளக்க கூட்டம் நடைபெறுகிறது. தற்போது, சென்னை டிபிஐ வளாகத்தில் இனி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News