Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, November 21, 2023

உங்கள் நரை முடியை நிமிடத்தில் கருமையாக்க உதவும் இயற்கை ஹேர் டை - தயார் செய்வது எப்படி?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
நம் தலைமுடி இளம் வயதில் நரைக்க ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்கள், மன அழுத்தம் காரணங்களாக சொல்லப்பட்டாலும் தலை முடியை சரியாக பராமரிக்காமல் இருப்பதும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

இளநரை ஏற்படக் காரணங்கள்:-

*தலை முடியை முறையாக பராமரிக்க தவறுதல்

*முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள்

*மன அழுத்தம்

*இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தால்

*முறையற்ற தூக்கம்

1)நெல்லிக்காய் + வெந்தயம் ஹேர் டை

தேவையான பொருட்கள்:-

*பெரு நெல்லிக்காய் - 10

*வெந்தயம் - 3 தேக்கரண்டி

*தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி

ஹேர் டை செய்யும் முறை..

முதலில் 10 பெரு நெல்லியை விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் இதை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து 3 தேக்கரண்டி வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் இதையும் நெல்லிச்சாறு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை அதில் சேர்த்து நன்கு கலந்து விடவும். 

பின்னர் இதை தலை முழுவதும் அப்ளை செய்து 1 மணி நேரம் வரை ஊறவிட்டு சீகைக்காய் போட்டு தலையை அலசிக் கொள்ளவும்.

இவ்வாறு வாரத்திற்கு 3 முதல் 4 முறை செய்து வருவதன் மூலம் நரை முடி அனைத்தும் கருமையாக மாறத் தொடங்கும்.

2)பாதாம் எண்ணெய் + எலுமிச்சை சாறு ஹேர் டை

தேவையான பொருட்கள்:-

*பாதாம் எண்ணெய் - 3 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் 3 தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும். பின்னர் இதை தலை முடிகளின் வேர்காள் பகுதியில் அப்ளை செய்து 1 மணி நேரம் வரை ஊற விடவும்.

பிறகு மைல்டான ஷாம்பு உபயோகித்து தலை முடியை நன்கு அலசிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் நாள்பட்ட நரை முடி அனைத்தும் கருமையாக மாறி முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News